2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி சீர்திருத்தங்கள்: தரம் 1, 6 ஆம் வகுப்புக்களில் பாடவிதானம் முழுமையாக மாற்றம்

Date:

2026 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரச பாடசாலைகளில் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளின் பாடவிதானம் முழுமையாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக தேசிய கல்வி நிருவகத்தின் பணிப்பாளர் கலாநிதி மஞ்சுளா விதான தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைய இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் ஏனைய வகுப்புகளின் பாடங்களில் பெரிதாக மாற்றங்கள் ஏற்படாவிடினும் தரம் 10 பாடக் கட்டமைப்பில் அரைவாசி பாடங்கள் மாற்றங்களுக்குள்ளக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க அமைச்சரவை பத்திரத்துக்கான தகவல்கள் ஆசிரியர் பயிற்சி திட்டங்கள் புத்தகங்கள் மொடியூல் தயாரிப்பு ஆகிய விடயங்கள் தமது தரப்பில் திட்டமிடப்பட்டு துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் பணிப்பாளர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கல்வியில் போட்டித்தன்மையைக் குறைக்கும் நோக்கில், 2026 ஆம் ஆண்டு முதல் கல்விச் சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், பரீட்சை முறை மற்றும் பாடத்திட்டத்தை திருத்தம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் பிரதமர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...