‘3ம் உலகப்போரை வைத்து விளையாடுகிறீர்கள்’: வெள்ளை மாளிகையில் இருந்து ஜெலன்ஸ்கியை வெளியேற்றிய ட்ரம்ப்:

Date:

வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதத்தில் துணை ஜனாதிபதி  ஜேடி வான்ஸ்சும் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த எல்லா சண்டையும் அங்கே இருந்த ஊடகங்கள் முன் ஓவல் அலுவலகத்தில் நடந்தது.

ஓவல் அலுவலகம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி  ஒருவர் தனது நட்பு நாட்டு தலைமையை மிக தரைகுறைவாக, மோசமாக நடத்தியது இதுவே முதல்முறையாகும்.

மிக கோபமான வார்த்தைகளில், சத்தமான குரலில் கடுமையாக ஜெலன்ஸ்கியை ட்ரம்ப் கண்டித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி  விளாடிமிர் ஜெலென்ஸ்கி, வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்பைச் சந்தித்து, உக்ரைனில் உள்ள கனிமங்களை அமெரிக்காவை பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்த சந்திப்பு நடத்தப்பட்டது.

உக்ரைன் – ரஷ்யா போரை ட்ரம்ப் விரும்பவில்லை. இந்த போருக்கு காரணமாக அமைந்த உக்ரைன் நேட்டோவில் இணையும் விருப்பத்தை அவர் விரும்பவில்லை.

உக்ரைன் போருக்கு அமெரிக்கா செலவு செய்வதை அவர் விரும்பவில்லை. உக்ரைன் ஜனாதிபதி  ணத்தை கொள்ளையடிக்கிறார். போர் என்ற பெயரை காரணம் காட்டி ஆட்சியில் நீடிக்கிறார்.

அவருக்கு ஏன் நாம் உதவ வேண்டும் என்று ட்ரம்ப் நினைக்கிறார். ரஷ்யாவுடன் பிஸ்னஸ் செய்வது தொடங்கி பல ஒப்பந்தங்களை செய்ய ட்ரம்ப் நினைக்கிறார். இதனால் உக்ரைனை கழற்றிவிட்டு விட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஜனாதிபதி  ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையே சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்புதான் கடுமையான மோதலில் முடிந்துள்ளது.
இந்த மோதலில் என்ன நடந்தது என்பதை இங்கே விவாதம் போல கொடுத்து உள்ளோம்.

அமெரிக்க துணை ஜனாதிபதி   ஜேடி வான்ஸ் – அமெரிக்க ராஜாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யா உடன் ராஜதந்திர முறையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

ஜெலன்ஸ்கி – ரஷ்யாவை நீங்கள் தடுக்கவே இல்லையே.. ரஷ்யா 2019ல் இருந்தே போரை மேற்கொண்டு வருகிறது. அவரை நீங்கள் தடுக்கவே இல்லை. நீங்கள் எதை ராஜாங்க செயல்பாடு.. ராஜதந்திர செயல்பாடு என்று சொல்கிறீர்கள்?

ஜேடி வான்ஸ் – உங்களின் செயல்பாடு.. உங்களின் நாட்டிற்கே அழிவை ஏற்படுத்தி விடும்.. உங்களின் நிலைப்பாடு உங்களின் நாட்டை அழித்துவிடும்.

ஜெலன்ஸ்கி – போர் என்றால் சிக்கல்தான்.. உங்களுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே கடல் இருக்கிறது என்பதால் உங்களுக்கு ஆபத்து இல்லை என்று நினைக்க வேண்டாம். எதிர்காலத்தில் ரஷ்யாவால் உங்களுக்கும் ஆபத்து வரும்.

ஜனாதிபதி   ட்ரம்ப் – உக்ரைன் நல்ல நிலைமையில் இல்லை.. நீங்கள் மிக மோசமான சூழலில் உள்ளீர்கள். உங்களுக்கு சாதகமாக எதுவும் இல்லை. இதற்கு எல்லாம் காரணம் நீங்கள்தான். உக்ரைன் மோசமான சூழலுக்கு மாற அனுமதித்து நீங்கள்தான்.. இந்த மோசமான சூழலில் உங்களுக்கு சாதகமான அம்சங்கள் இல்லை.

ஜெலன்ஸ்கி – சாதகமான அம்சங்களை வைத்துக்கொண்டு விளையாடுவதற்காக நான் வரவில்லை.

ட்ரம்ப் – நீங்கள் பல கோடி மக்களின் உயிரோடு விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்

ஜெலன்ஸ்கி – நாங்கள் விளையாடவில்லை.. இந்த போரை நாங்கள் தனியாக எதிர்கொண்டு வருகிறோம்.. நாங்கள் தனித்துவிடப்பட்டு உள்ளோம்.. அதற்கு நன்றி.

ட்ரம்ப் – அப்படி எல்லாம் பேசாதீர்கள்.. நீங்கள் தனியாக இல்லை.. நீங்கள் தனியாக இருந்தால் கதையே வேறு. அமெரிக்கா உதவி இருக்கிறது உங்களுக்கு. முன்னாள் பதவியில் இருந்த முட்டாள் பிரதமர் உங்களுக்கு 350 பில்லியன் டாலர் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.

ஜெலன்ஸ்கி – ஜேடி வான்ஸை நோக்கி, நீங்கள் இரண்டு நாட்டு போரை பற்றி சத்தமாக இப்படி மீடியா முன் பேசுவது சரியா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.

ட்ரம்ப் – வான்ஸ் சத்தமாக பேசவில்லை. நாங்கள் இருப்பதால் எதோ உங்கள் நாடு இருக்கிறது. இல்லையென்றால் இந்த போரில் நீங்கள் இன்னும் மோசமாக சிக்கி இருப்பீர்கள். உங்களுக்கு இந்த போரில் வெல்லும் வாய்ப்பே இல்லை.. நீங்கள் 3ம் உலகப்போரை வைத்து விளையாடிக்கொண்டு இருக்கிறீர்கள்.. ஒப்பந்தம் செய்ய விருப்பம் இருந்தால் அடுத்த முறை இங்கே வாருங்கள்.. என்று கூறினார்.

வெள்ளை மாளிகையில் நடந்த கடுமையான சண்டைக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி வெளியேற்றப்பட்டதாக பாக்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ட்ரம்ப்பிற்கு மிகவும் நெருக்கமான ஊடகம் ஆகும் இது. அவர்களின் கூற்றுப்படி ஜெலன்ஸ்கியை “வெளியே போங்க” என்று ட்ரம்ப் கூறியதாக தெரிகிறது.

அமெரிக்காவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் எவ்வாறு நடக்கின்றன என்பதை உலகம் நேரடியாகவே கண்டது. அவை கடினமானவை, உணர்ச்சிப்பூர்வமானவை மற்றும் பதற்றமானவை.

இது இரு தரப்பினருக்குமே கடினமான பேச்சுவார்த்தை என்பது தெளிவாகத் தெரிந்தது.

இரண்டு நாட்டு தலைவர்கள் இடையே காரசாரமாக நடந்த இந்த மோதல் சர்வதேச அரசியலை கடும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

source: bbc/aljazeera

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...