தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

Date:

நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் அடிப்படையில், அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.

அதன்படி மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பாடசாலைகளை  https://g6application.moe.gov.lk/#/ என்ற இணையதளத்திற்கு பிரவேசித்துப் பார்வையிடலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

2024 ஆம் ஆண்டு 5 ஆம் தர புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகள் கிடைக்காத மற்றும் பிற நியாயமான காரணங்களுக்காக தங்களுக்கான பாடசாலையை மாற்ற விரும்பும் மாணவர்கள் எதிர்காலத்தில் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் மேலும் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் அனைத்து மேன்முறையீடுகளும் இணையவழி ஊடாக மட்டுமே கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...