யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் டெல் அவிவை நோக்கி 3 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஹமாஸின் அல் கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்துள்ளது.
பொதுமக்களை கொன்றொழிக்கின்ற சியோனிச தாக்குதலுக்கு இது மேற்கொள்ளப்பட்டதாக M90 ரக ஏவுகணைகளை ஏவியப் பின்னர் ஹமாஸ் தெரிவித்துள்ளது
இந்த ஏவுகணைகளில் ஒன்று வானில் முறியடிக்கப்பட்டதாகவும் ஏனைய இரண்டும் டெல் அவிவின் வெட்ட வெளியில் விழுந்ததாகவும் இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர்ச்சேதங்கள் எதுவும் பதியப்படவில்லை.
யுத்த நிறுத்தத்திற்கு பின்னர் காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 700 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 900 பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீனிய சுகாதாரத் தறை அறிவித்துள்ளது.