விபத்துக்குள்ளான விமானம் குறித்து விசாரிக்க விமானப்படைத் தளபதியினால் சிறப்பு விசாரணைக் குழு நியமனம்!

Date:

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல.05 தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று (21) காலை குருநாகல் வாரியபொல பகுதியில் பயிற்சியின் போது விபத்துக்குள்ளானது.

விமானத்தின் இரண்டு விமானிகளும் விமானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறி, குருநாகல் மினுவாங்கொட கல்லூரி வளாகத்தில் பாராசூட்களின் உதவியுடன் தரையிறங்கினர்.

இந்த விமானத்தில் தலைமை பயிற்சி பயிற்றுவிப்பாளர் விமானியும் , பயிற்சி விமானி அதிகாரியும் இருந்தனர், மேலும் இந்த அதிகாரிகள் தற்போது குருநாகல் தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து காலை 07.27 மணியளவில் புறப்பட்டு, காலை 07.55 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தைத் தொடர்ந்து, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க,அவர்கள் விபத்து குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தார்.

Popular

More like this
Related

கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி:மக்களுக்கு ராகுல் நன்றி!

கேரளத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்த மக்களுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்...

இலங்கை வரவுள்ளார் வியட்நாம் ஜனாதிபதி!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி தோ லாம் அவர்கள் இலங்கைக்கு விஜயம்...

வளைகுடா நாடுகளிடம் இழப்பீடு கோரும் ஈரான்: அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக குற்றச்சாட்டு!

-லத்தீப் பாரூக் சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும்...

2.5 மில். டொலர் அரச நிதி மோசடி: ஜனாதிபதி பாராளுமன்றில் நாளை உரை

அவுஸ்திரேலிய கடன் வழங்குநருக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மூன்றாம்...