முஸ்லிம் பரீட்சார்த்திகள்,உத்தியோகத்தர்களின் வசதிக்காக ஜும்ஆ தொழுகையை நேர காலத்துடன் முடிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தல்!

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை – 2024 (2025) இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில்,  எதிர்வரும் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை முஸ்லிம் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய முஸ்லிம் உத்தியோகத்தர்களின் வசதி கருதி நேர காலத்துடன் முடித்துக் கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்  திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

21.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விஞ்ஞான (34) பாட வினாத்தாள் பகுதி I  பி.ப. 2.00 மணி தொடக்கம் பி.ப. 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

அன்றைய தினம் ஜும்ஆ பிரசங்கமும் ஜும்ஆ தொழுகையும் நடைபெறுவதனால் ஜும்ஆ பிரசங்கத்தையும் ஜும்ஆ தொழுகையையும் முடியுமான வரை முஸ்லிம் பரீட்சார்த்திகளினதும் பரீட்சை நிலைய முஸ்லிம் உத்தியோகத்தர்களினதும் வசதி கருதி நேர காலத்துடன் முடித்துக் கொள்ளுமாறு  சகல பள்ளிவாசல் நிருவாக சபையினருக்கும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

 

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...