அமெரிக்க வரிகளின் தாக்கம் குறித்து கலந்துரையாட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு

Date:

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கு அமெரிக்கா வித்துள்ள புதிய வரித்திருத்தத்தினால் எழுந்துள்ள சிக்கல்களைத் தீர்க்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் அரசாங்கம் என்ற அடிப்படையில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தக் கூட்டம் நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது X கணக்கில் இதை தெரிவித்துள்ளார்

இன்று காலை, 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த விடயம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதியைச் சந்திக்க அனுமதி கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் ஏனைய விளக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

QR கொடுக்கல் வாங்கலை துரிதப்படுத்த நடவடிக்கை

நாட்டில் அன்றாட சில்லறைப் பரிவர்த்தனைகளுக்குப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், வெளிப்படைத்தன்மை மற்றும்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய...

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில்...

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...