அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தை நாளைய தினம் வழங்க வேண்டும்

Date:

அரச ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட ஏப்ரல் மாத சம்பளத்தை நாளைய தினம் வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுக்கு, பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கிணங்க, ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணத்தின் அடிப்படையில் வரவு, செலவுத் திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட சம்பளத்தை நாளைய தினம் வழங்க முடியாவிட்டால், அந்த நிலுவைத் தொகையை ஏப்ரல் 25 ஆம் திகதி வழங்க வேண்டும் எனவும் பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது .

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்துவதற்கும் அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும் தொழில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...