இலங்கைக்கு அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் ட்ரம்ப்க்கு ஜனாதிபதி அநுர கடிதம்

Date:

அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என பொருளாதார அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி தனது கடிதத்தில், வரிகள் தொடர்பில் தாக்கத்தைக் குறைப்பதற்கான சாத்தியமான வழிகள் மற்றும் இலங்கை எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வரிகளைக் குறைக்க ஒத்துழைக்குமாறும் அந்த கடிதத்தில் கோரியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை  ஜனாதிபதியின் கடிதம் கிடைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இன்று இரவு 08.00 மணிக்கு அமெரிக்க வர்த்தக அலுவலகத்துடன் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பரஸ்பர விதிகளை அறிமுகப்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி, இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 வீத வரி விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...