இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் தீக்காயங்களுக்குள்ளான ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூரின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படும் காட்சி.

Date:

தெற்கு காசா நகரமான கான் யூனிஸில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தின் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான பலஸ்தீனிய ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன.

நேற்று முன்தினம் நாசர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ‘பலஸ்தீன டுடே’ செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளரான அஹ்மது மன்ஸூர்,  உயிருடன் எரிந்து கொண்டிருக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டன.

தாக்குதலை நேரில் கண்ட ‘மிடில் ஈஸ்ட் ஐ’ நிருபர் அகமது அஜீஸ், கூடாரத்தில் இருந்தவர்கள் “மன்ஸூரை தீப்பிழம்புகளிலிருந்து மீட்க தீவிரமாக முயன்றனர், ஆனால் கூடாரத்தில், மரம் மற்றும் நைலான் விரைவாக தீப்பிடித்ததால், அவரை மீட்க கடினமாகியது என்றார்.

அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான வஃபா செய்தி நிறுவனத்தின் தகவலின் படி, மன்சூர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார். இந்த தாக்குதலில் அவருடன் மேலும் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். எட்டு ஊடகவியலாளர்கள் காயமடைந்தனர்.

அக்டோபர் 2023 முதல் காசா பகுதியில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 211 பலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்ச் 18 அன்று இஸ்ரேலிய இராணுவம் காசா மீது மீண்டும் ஒரு கொடிய தாக்குதலைத் தொடங்கியது, அதன் பின்னர் கிட்டத்தட்ட 1,400 பேர் கொல்லப்பட்டனர். 3,400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கடந்த வாரம், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பலஸ்தீனியர்களை வெளியேற்றும் திட்டத்தை செயல்படுத்த முயற்சிகள் நடந்து வருவதால், காசா மீதான தாக்குதல்களை அதிகரிப்பதாக சபதம் செய்தார்.

2023 முதல் காசாவில் 50,700 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொடூரமான இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் உயிரோடு எரிக்கப்பட ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூரின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படும் காட்சி.

 

Popular

More like this
Related

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...