இஸ்ரேலுக்கான ஏற்றுமதியில் அரபு நாடுகள் முன்னணியில்!

Date:

இஸ்ரேல் பலஸ்தீனத்தில் மேற்கொண்டு வரும் கொடுமைகளுக்கு உலகெங்கிலும் கண்டனங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு மருந்துகள், உணவுப்பொருட்கள், சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸஸுக்கு அடுத்ததாக எகிப்து இடம்பெற்றுள்ளது.

இத்தகவலை “அறபி போஸ்ட் ” என்ற ஆய்வை ஆதாரம் காட்டி அல்ஜஸீரா வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் 925 உற்பத்தி பொருட்களை எகிப்து இந்த யுத்த காலப்பகுதியில் ஏற்றுதி செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள், இஸ்ரேலின் செயல்களை உலகம் கண்டித்தாலும், சில அரபு நாடுகள் வர்த்தக உறவுகளை தொடரும் நிலையை காட்டுகிறது. இத்தகைய கொடுமைகளை புரிகின்ற ஒரு நாட்டுடன் உறவுகளை பேணி வருகின்றனர் என்பது பலரிடையே ஆச்சர்யத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பலஸ்தீனில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கொடுமைகள் குறித்து உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தாலும், சில அரபு நாடுகள் இஸ்ரேலுடன் வணிக உறவுகளைத் தொடர்வது வருத்தத்தையும் கேள்விகளையும் எழுப்புகின்றது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...