எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் உறுதியுள்ள காசா மக்கள்!

Date:

காசா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலிய கொடூரத் தாக்குதல்களால் அடிப்படை வசதிகளெல்லாம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றும் புத்திசாலித்தனமான முயற்சிகளால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், துவிச்சக்கர வண்டியின் செயினை பயன்படுத்தி, அதன் சக்தியால் தையல் இயந்திரத்தை இயக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இயந்திரத்தினூடாக அவர்கள் தங்களுக்கே தேவையான ஆடைகளை தைத்துக் கொள்கிறார்கள்.

மின்சாரம், எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரு பயங்கரமான யுத்த சூழ்நிலையை எதிர்கொண்டு, இப்படி வாழ்க்கையை முன்னெடுத்து செல்வது காசா மக்களின் உறுதி மற்றும் படைப்பு திறனை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, காசா மக்களின் நிலைமையை மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...