கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்திலிருந்து பலஸ்தீனத்துக்கு 2 மில்லியன் ரூபா நன்கொடை

Date:

பலஸ்தீன மக்களின்  மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் சேகரித்த, 2 மில்லியன் ரூபாவை கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

கண்டி  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக், செயலாளர் என்.எம்.எம். மன்சூர், துணைத் தலைவர்களான அஷ்ஷேக் ஃபாயிஸ்,  ரீசா வாஹித், உதவிச் செயலாளர் அஷ்ஷேக் ஸக்கி உள்ளிட்ட சம்மேளனப் பிரதிநிதிகள் குழுவினருடன்,  இலங்கைக்கான பாகிஸ்தானின் வதிவிடப்பிரதிநிதி  அப்சல் மரிக்கார் அவர்களும், கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் அவர்களிடம் இந்த நன்கொடையை வழங்கினர்.

இந்த நன்கொடை கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட ரூ. 2.5 மில்லியன் நன்கொடையின் தொடர்ச்சியாகும்.

சுதந்திரம், கண்ணியம் மற்றும் நீதிக்கான பலஸ்தீன மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு மத்தியில் அவர்களுக்கு ஆதரவளிக்கும் வெளிப்பாடின் இரண்டாவது கட்டமாக இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

இந்த நிதி, கண்டி மாவட்டம் முழுவதிலும் உள்ள பள்ளிவாசல்களின் இணைந்த முயற்சியில் திரட்டப்பட்டதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது, உலகளாவிய ஒடுக்குமுறை மற்றும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கு இலங்கை முஸ்லிம்களின் உறுதியான ஆதரவை எடுத்துக்காட்டுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...

பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (22) நாட்டின் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை, நுவரெலியா,...