சிவப்பு நிறமாக மாறிய அமெரிக்க தூதரக நீர்த்தடாகம்

Date:

லண்டன் மாநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தடாகத்தை இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு நிறச் சாயத்தை கலந்து அதிலிருந்த நீரை சிவப்பு நிறமாக மற்றி அமெரிக்காவுக்கு தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து  நீர்த் தடாகத்தில் 300 லீட்டர் சிவப்பு சாயத்தை கொட்டிய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை செய்வதை கண்டிக்கும் வகையிலும் இந்த ஆயுத விற்பனையால் காசா எவ்வளவு தூரம் இரத்தக் களரியாக மாறியிருப்பதையும் கீழே உள்ள வீடியோ உணர்த்தக் கூடியதாக உள்ளது.

‘அமெரிக்க ஆயுதங்கள் கண்மூடித்தனமான போரை தூண்டிவிடுவதால் நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்தோம். காசாவில் பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகள் மீது குண்டுகள் வீசப்பட்டன, முழு சுற்றுப்புறங்களும் இடிந்து விழுந்தன, பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன உயிர்கள் அழிக்கப்பட்டன.

‘இஸ்ரேலிய இராணுவத்திற்கு மிகப்பெரிய ஆயுத சப்ளையராக, காசாவில் வெளிப்படும் பயங்கரங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கொடூரமான இனப்படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் மீது முழுமையான ஆயுதத் தடையை அறிவிக்குமாறு இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த மாதம் போர்நிறுத்தம் முறிந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் படைகள் காசாவில் இராணுவ நடவடிக்கைகளை முடக்கிவிட்ட நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...

எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி...

பல மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என இயற்கை...