தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு 16 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு: 11 பேர் கைது

Date:

வெலகெதர, ஹவன்பொல பகுதியில் தலைக்கவசத்தினால் தாக்குதலுக்குள்ளாகி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலுக்கு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் பயன்படுத்தப்பட்டதாக மாவதகம பொலிஸார் நடத்திய விசாரணைகள் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்றைய (22) தினம் அரேபொல பகுதியில் 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அரேபொல மற்றும் அம்பகோட்டை பகுதிகளைச் சேர்ந்த 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் குருநாகல் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மாவதகம மற்றும் வெலிகெதர காவல்துறையினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...