ஜக்கிய அரபு அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் அமீரகப்படுத்தல் அமைச்சின் சம்பளப் பாதுகாப்புத் திட்டத்தில் வீட்டு பணியாளர்களையும் உள்ளடக்கி புதிய ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி வீட்டு பணியாளர்களுக்கான சம்பளம் அமீரகத்தின் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட வங்கிகள், பணப்பரிமாற்ற நிலையங்கள், நிதி நிறுவனங்கள் ஊடாக மட்டுமே வழங்கப்பட வேண்டும். அத்தோடு மாதத்துக்குரிய சம்பளம் குறித்த தினத்திலிருந்து குறித்த 10 நாட்களுக்கு மேற்படாமல் கொடுக்கப்பட வேண்டும்.
தவறென்ற பட்சத்தில் தொழில்தருநர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு சம்பளம் வழங்காத தொழில் தருநர்களுடைய பைல்கள் தடுத்து வைக்கப்படும்.
இந்த சட்டத்தை அமுல்படுத்துவற்கென அனைத்து தொழில் தருநர்களும் அமைச்சில் பதிவுசெய்யப்பட வேண்டும் என மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.