உள்ளூராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்பின் இரண்டாம் நாள் இன்று

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

அதன்படி இன்றும் (25) ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திககளிலும் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தபால்மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்டுள்ள காலம் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...