இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு வரி விதிப்பு கிடையாது: டிரம்ப் அறிவிப்பு

Date:

  இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு 2வது முறையாக சந்தித்து பேசியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.  பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி அறிவித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா பதிலடி கொடுத்தது. அமெரிக்க பொருட்கள் மீது 34 சதவீத வரி விதித்தது.

இதுபோல், கனடா போன்ற வேறு சில நாடுகளும் பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளன. இதனால் உலக வர்த்தக போர் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சர்வதேச பொருளாதார மந்தநிலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...