இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுடன் இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் உத்தியோகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்கவுள்ள நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.