இனப்பாகுபாட்டை விதைத்துச் சென்ற இந்தியப் பிரதமரின் விஜயம்..!

Date:

ஈரான் நாட்டுத் தலைவர் இலங்கை வந்த போது உமா ஓயா திட்டம் எனும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை திறந்து வைத்தார்.

அவருக்குப் பின்னர் இலங்கைக்கு வந்த முக்கியமான நாட்டுத் தலைவரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேம்படுத்தப்பட்ட புகையிரதப் பாதையொன்றை திறந்து வைத்தார்.

இலங்கைக்கு வந்த சமயம் இராமர் பாலத்தை தரிசிக்கக் கிடைத்ததை ஒரு உடனிகழ்வாக அவர் தனது x தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் தற்போதைய பிரதமர் மோதி ஒரு முஸ்லிம் வெறுப்பு உணர்வு கொண்டவர் என அறியப்படும் நிலையில் அவர் இலங்கை வரும் சமயம் இந்தியாவில் முஸ்லிம்களின் வக்பு சொத்துக்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானமும் ஒரு உடனிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்திய பிரதமர் இது போன்ற விடயங்களில் பரவலாக அறியப்பட்டவர் என்பதால் இலங்கை விஜயத்தின் போது அவதானமாக இருக்க வேண்டி ருஷ்தி என்ற முஸ்லீம் பாத்திரம் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தப் பயன்பட்டது.

ஆனால் இலங்கை முஸ்லிம்களிடம் இருந்து இந்தியாவுக்கோ பிரதமர் மோதிக்கோ எதிரான குறிப்பிடத்தக்க எதிர்ப்பலைகள் எதுவும் பதிவாகவில்லை.

இலங்கையின் நலனில் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானது என்ற வகையில் நாட்டு நலனுக்கு எதிராக இலங்கை முஸ்லிம்கள் இருக்கப் போவதில்லை. இருந்ததும் இல்லை என்பதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடாகத் தெரிகிறது.

ஆனால் இந்தியப் பிரதமர் அடையாளப்படுத்தப்படுகின்ற முஸ்லீம் விரோதப் பாத்திரம் இலங்கை முஸ்லிம்களின் மீதும் நீளுமா என்ற கேள்வியை நாட்டு நலனையும் தாண்டி இலங்கை முஸ்லீம் சமூகத்திடம் தோற்றுவிப்பதற்கு பிரதமருடைய இலங்கை விஜயம் காரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற அங்கலாய்ப்பு இலங்கை முஸ்லீம் சமூகத்திடம் நிலவுவதையும் அவதானிக்க முடிகிறது.

இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுக்கென முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இலங்கை முஸ்லிம்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. அதற்கு உயிர்கொடுத்தாற்போலவே தற்போதைய இந்தியப் பிரதமரின் விஜயமும் அமைந்ததாக முஸ்லீம் சமூகத்தில் பேசப்படுகிறது.

ஏனெனில் பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது முஸ்லீம் தரப்பில் இருந்து எவரையும் சந்தித்ததாகவோ எங்கேயும் தரிசித்ததாகவோ தகவல்கள் இல்லை.

ஏற்கனவே இந்தியாவுடைய உதவிகள் வடக்குக்கும் மலையகத்துக்குமே பெருவாரியாகத் தாரை வார்க்கப்படும் நிலையில் இலங்கையில் ஏனைய பிரதேசங்களிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள் என்பதை பிரதமர் மோடி அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த விஜயம் அமைந்திருந்தால் பிரதேசவாதம், இனவாதம் தாண்டிய இந்திய பிரதமரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்கான அரிய சந்தர்ப்பமாக இந்த விஜயம் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இலங்கை முஸ்லிம்கள் நாட்டுக்குப் பங்களிப்புச் செய்து வருபவர்கள் என்ற வகையில் இலங்கை ஜனாதிபதி அவர்களும் இலங்கை முஸ்லிம்களுக்கென ஏதும் அவகாசம் வழங்கியிருந்தால், தான் இனவாதமற்ற ஜனாதிபதி என்பதை எண்பித்துக் காட்டுவதற்கு அவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கும்.

காலனித்துவ ஆட்சிகளின் பிரித்தாளும் கொள்கைகளால் இலங்கை அடைந்த சாபத்திலிருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கை துளிர்த்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. அதனை முளையிலேயே கிள்ளி விடாமல் நாட்டின் நலனுக்குப் பயன்தரும் வகையில் வளர்த்தெடுப்பதிலேயே இரு நாட்டுத் தலைவர்களினதும் வெற்றி இருக்கிறது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...