சிஐடியில் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்‌ஷ!

Date:

பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (07) காலை ஆஜராகியிருந்தார்.

நாமல் ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாவது  தற்போது ஒரு பொதுவான நிகழ்வாகி விட்டது.

மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தமை தொடர்பில் வினவியபோது, நான் வீட்டிற்கு சென்று பார்த்த போது தந்தை மஹிந்த ராஜபக்ஷ நலமாக இருந்தார் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...