ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் இன்று மிகப்பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில்500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. துறைமுகத்துக்கு அருகே உள்ள கண்டெய்னர் யார்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலரும் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கர் வெடி விபத்தில் அதிர்வலையானது பல கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தீயை அணைக்கவும் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்பு துறையினர் முயன்று வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக துறைமுகத்தில் ஒரு அதிகளவு கரும்புகை காணப்பட்டது.
இந்த நிலையில் ஈரானில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் தற்போது 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளனது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரானின் மிகவும் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகமான பந்தர் அப்பாஸ், பாரசீக வளைகுடாவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் ஈரானின் முக்கிய வர்த்தக மையமாகும், மேலும் எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிகவும் முக்கியமானது.
இங்கிருந்து பல்வேறு பொருட்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகின்றன. இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.
ஈரான் – அமெரிக்கா, ஓமானில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில், பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.