அமெரிக்காவின் சதி வலையில் சிக்கியுள்ள மோடி அரசு!

Date:

இந்தியா என்பது சாதாரண நாடு அல்ல அது நாகரீகத்தின் தொட்டில். உலகிற்கு அறிவை வழங்கிய மிகப் பெரிய நாகரீகம். திராவிட நாகரீகம் ,அறிவு உலகின் மிகப் பெரிய அறிவுக் களஞ்சியம்.

Google உற்பட உலகின் அனேக தகவல் தொழில்நுட்ப முன்னோடிகள், பொறியிலாளர்கள் இந்தியர்கள். இந்தியாவின் அறிவு பாரம்பரிய சக்தி மிக்க அறிவை உடையது.

தற்போது உள்ள அமைதி நிலையில் இந்தியா இன்னும் 10 வருடங்கள் தொடர்ந்தால் அது அமெரிக்காவை, சீனாவை விஞ்சிய மிகப் பெரிய வல்லரசாக மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

தற்போது உலகில் அதி கூடிய மக்கள் தொகை கொண்ட நாடு மட்டுமல்ல உலகின் அதி உயர் கணித அறிவுடைய நாடு என்றால் இது மிகையாகது.

சிலிகன் வலியை விஞ்சும் அளவிற்கு இந்தியாவின் பெங்களூர் வேகமாக வளர்ந்துள்ளது. AI தொடர்பான ஆசிரியர் பயிற்சி மேற்கொள்ளும் போது நான் பல முறை எமது விஞ்ஞான ஆசிரியர்களிடம் குறிப்பிட்டுள்ளேன் மிக கிட்டிய எதிர்காலத்தில் அமெரிக்கா பாகிஸ்தானைக் கொண்டு பெங்களூரின் IT நகரை அழிக்கும் என்று.

தற்போதைய பதற்றம் மிகத் தெளிவாக அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டது. இது பாகிஸ்தானிடம் உள்ள பலஸ்டிக் ஏவுகணை கொண்டு இந்தியாவின் பங்களூர்,(IT Hub),ஹதைரபாத்( HITEC City), பூனா Pune (Oxford of the East)சென்னை (one of Asia’s largest IT parks) கொச்சி (Queen of the Arabian Sea) போன்ற நகர்களை இலக்கு வைக்கும் .

யுத்தம் முடியும் போது இந்தியாவின் கரம் மேலோங்க நிறைய வாய்ப்பு உள்ளது .ஏனெனில் தற்போதைய பாகிஸ்தான் அரசு ஒரு திருட்டு அரசு முறைகேடாக பிறந்தது. ஆனால் இரு நாடுகளிலும் நாம் நினைத்து பார்க்க முடியாத பேரழிவு ஏற்படும்.

அமெரிக்கா தனக்கு அடுத்து இந்தியா வல்லரசாவதை தடுப்பதற்கு மிகத் துல்லியமாக தீட்டிய திட்டத்தில் மோடி அரசு மாட்டி உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.

தொடரும்…
எம்.என் முஹம்மத்

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...