மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய இளைஞர்கள்..!

Date:

பிலியந்தலை பகுதியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு  எதிராக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் பல சுவரொட்டிகளையும் பொலிஸார் கைபற்றி உள்ளனர்.

இந்தியப் பிரதமரின் வருகைக்கும், கையெழுத்தாகும் ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த இளைஞர்களை கைது செய்யவில்லை என்றும் அனைத்து சுவரொட்டிகளும் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஏற்கனவே ஒட்டப்பட்டிருந்த அனைத்து சுவரொட்டிகளையும் அகற்றவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை இலங்கைக்கு வருகை தரவிருக்கிறார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...