எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் உறுதியுள்ள காசா மக்கள்!

Date:

காசா பகுதியில் நடைபெறும் இஸ்ரேலிய கொடூரத் தாக்குதல்களால் அடிப்படை வசதிகளெல்லாம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அங்கு வசிக்கும் மக்கள் தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றும் புத்திசாலித்தனமான முயற்சிகளால் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோவில், துவிச்சக்கர வண்டியின் செயினை பயன்படுத்தி, அதன் சக்தியால் தையல் இயந்திரத்தை இயக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த இயந்திரத்தினூடாக அவர்கள் தங்களுக்கே தேவையான ஆடைகளை தைத்துக் கொள்கிறார்கள்.

மின்சாரம், எரிபொருள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் ஒரு பயங்கரமான யுத்த சூழ்நிலையை எதிர்கொண்டு, இப்படி வாழ்க்கையை முன்னெடுத்து செல்வது காசா மக்களின் உறுதி மற்றும் படைப்பு திறனை எடுத்துக்காட்டுகிறது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, காசா மக்களின் நிலைமையை மட்டுமல்லாமல், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அதற்கான தீர்வுகளையும் உலகிற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள சீனத் தூதுக்குழு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட...

இலங்கையை மீளக் கட்டியெழுப்ப 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இந்தியா அறிவிப்பு.

இலங்கையில் டித்வா புயலால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப இந்தியா 450...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் கள விஜயம்

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட சில பிரதேசங்களுக்கு ஸ்ரீலங்கா...

கொழும்பு மாநகர சபையில் ஆளும் தேசிய மக்கள் கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தோல்வி!

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கொழும்பு மாநகர சபையின் வரவு-செலவுத்...