ஒரே வருடத்தில் சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சாதனைப் படைத்த மாணவி!

Date:

ஒரே ஆண்டில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளில் தோற்றி சிறப்பான சித்தி பெற்று கொழும்பு விசாகா வித்தியாலய மாணவி ரனுலி விஜேசிறிவர்தன சாதனை படைத்துள்ளார்.

ரனுலி மே 2024 இல் 2023 (2024) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றி, ஆங்கில இலக்கியத்தில் B சித்தியுடன் 8A மற்றும் 1B சித்தியைப் பெற்றுள்ளார்.

அதனை தொடர்ந்து, நவம்பர் 2024 இல், அவர் கணிதப்பிரிவில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி 3A சித்திகளை பெற்று தேசிய ரீதியில் 963 இடத்தையும் பெற்றுள்ளார்.

தனது 10 ஆம் வகுப்பு படிப்பை முடிக்கும் போதே ரனுலி, உயர்தரப் பாடத்திட்டத்திற்கும் தயாராகியுள்ளார். குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட மாணவர்கள் பாடசாலை மூலம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்படாததால், அவர் தனியார் பரீட்சார்த்தியாக பரீட்சைக்கு தோற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்த நிலையில், 20 வருட அனுபவமுள்ள ஆசிரியரான அவரது தந்தை, இலங்கையின் கல்வி முறை திறமையான மாணவர்கள் விரைவாக முன்னேற அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் பட்டதாரிகள் பெரும்பாலும் 26 அல்லது 27 வயதில் பணியிடத்தில் சேர்கிறார்கள், மற்ற நாடுகளில் இது 21 அல்லது 22 வயதாகும், அதன்படி, விரைவான பட்டப்படிப்பு தனிநபர்களுக்கும் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...