தேர்தல் பிரசாரத்திற்காக தனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Date:

தனது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி அநாவசியமான முறையில் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

எழுத்துமூலமான முறைப்பாட்டு கடிதமொன்றை அவர் அனுப்பி வைத்துள்ளார்.

அத்தனகல்ல பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கதிரை சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமு கட்சி வேட்பாளர்கள் சிலர் தமது புகைப்படத்துடன் லசந்த அழகியவண்ண மற்றும் சரண குணவர்தனவின் புகைப்படங்களை இணைத்து கையேடுகளை பகிர்வதாகவும் இதற்கு எந்தவொரு அனுமதியையும் தான் வழங்கவில்லையெனவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கதிரை சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் தனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாமென ஏற்கனவே கூறியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு இது குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Popular

More like this
Related

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...

காற்றழுத்தம் நீடிக்கிறது: நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழை

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து...

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...