இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Date:

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கும் இடையிலான மருத்துவக் கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெலாரஸிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்சாண்டர் கஜாயேவை (Alexander Khajayev) சந்தித்துள்ளதுடன், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.

இதற்கிடையில், மின்ஸ்க் நகரில் அமைந்துள்ள பெலாரஸ் அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அமைச்சர் விஜித ஹேரத் கண்காணிப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டார். அங்கு அவர் அந்தப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் மற்றும் விட்டெப்ஸ்க், க்ரோட்னோ மற்றும் கோமல் ஆகிய மருத்துவப் பல்கலைக்கழகங்களின் பீடாதிபதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

தற்போது 3,000க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் அங்கு மருத்துவக் கல்வி கற்று வருவதாகவும், இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான கல்விப் பங்களிப்பை பிரதிபலிக்கிறது என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: காயமடைந்த சிறை அதிகாரிகளை சந்தித்த அமைச்சர்

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும்...

காஸாவில் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த கால ஹமாஸ் ஆட்சி கலைப்பு: நிர்வாகப் பொறுப்பை ஏற்கிறது நிபுணர்கள் குழு!

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் பல மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோதலில் சிறைச்சாலைகள் இருந்த பல...