கட்டுகஸ்தோட்டை பாலத்திலிருந்து இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்த நிலையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஆற்றில் குதித்து குறித்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவம் நேற்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இளம் பெண் ஒருவர் மகாவலி ஆற்றில் விழுந்துள்ளதாக பிரதேசவாசிகள் குறித்த அதிகாரிக்கு தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரி பாலத்திலிருந்து மகாவலி ஆற்றில் குதித்து அந்த பெண்ணை காப்பாற்றியுள்ளார்.
சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட பெண் கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதானவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம், காவல்துறையின் பொறுப்புணர்வு, வீர உணர்வு மற்றும் பொதுமக்கள் மீதான அக்கறையை வெளிக்காட்டுகிறது.
இந்த நெகிழ்ச்சிகரமான செயலுக்காக, அந்த பொலிஸ் அதிகாரிக்கு சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பாதுகாப்பு என்பது பணிக்காக மட்டும் அல்ல – அது ஒரு பொறுப்பும், கடமையும்!” என்பதையே இந்த பொலிஸ் அதிகாரியின் செயலால் உணர முடிகிறது.