டொன் பிரியசாத் உயிரிழந்ததாக பொலிஸார் மீண்டும் உறுதிப்படுத்தினர்

Date:

நேற்றிரவு வெல்லம்பிட்டி, மீதொட்டமுல்ல பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான  டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தற்போது மீண்டும்  உறுதிப்படுத்தியுள்ளனர்.

நேற்று இரவு (22) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

காயமடைந்த டொன் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நேற்றிரவு செய்தி வெளியாகி இருந்த போதிலும் பொலிஸார் அதனை பின்னர் மறுத்திருந்தனர்.

இந்நிலையில்,டொன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தற்போது அறிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...