தேஷபந்து தென்னகோனுக்கு மீண்டும் விளக்கமறியல்..

Date:

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன்  இன்று (03) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

கடந்த 20 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தேசபந்து தென்னகோன் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவரை அன்றிலிருந்து இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தேஷபந்து தென்னகோனை 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் 20 நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் மார்ச் மாதம் 19 ஆம் திகதி மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

 

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...