நாட்டில் இன்று பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவு

Date:

நாட்டில் இன்று பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சிப் பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்றும் சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக,இம்மாதம் 14 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று நண்பகல் 12.11 அளவில் ஹத்திகுச்சி, கலங்குட்டிய, ஹல்மில்லேவ, இபலோகம, பலுகஸ்வெவ, ஹபரணை ஆகிய பகுதிகளுக்கு நேராகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக,...

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

கணினி அமைப்பு கோளாறு காரணமாக இன்று (24) பதிவாளர் நாயகம் அலுவலக...

நாட்டின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்

மேற்கு, தெற்கு, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா...

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...