கொழும்பில் நாளை 15 மே தின பேரணிகள் ஏற்பாடு..!

Date:

கொழும்பில் நாளை (மே 1) குறைந்தது 15 மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் மே தின பேரணிகளுக்கு பொலிஸார் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்துத் திட்டத்தை அமுல்படுத்தவுள்ளனர்.

நாடு முழுவதும் நடைபெறும் மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் நினைவு நிகழ்வுகளுக்கு பொருத்தமான பாதுகாப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாகாணங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பிரிவுகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்கள் ஆகியோருக்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்கள், உத்தரவுகளை வழங்கியுள்ளது.

கொழும்பு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மே தின பேரணிகள் மற்றும் நினைவு நிகழ்வுகள் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.

எனவே வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...