பலவந்தமாக எரிக்கப்பட்ட 278 ஜனாஸாக்கள் தொடர்பில், 2020 மார்ச் 31 ஆம் திகதி முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்டதை மையப்படுத்தி ஐந்தாவது வருட நினைவு தினம் இம்மாதம் 06 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.
முஸ்லிம் சமூகத்தின் சிவில் அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்நிகழ்வைத் தொடர்ந்து நினைவு நாள் பிரகடனமாக பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. முஸ்லிம் சமூகத்தின் 17 சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்தப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளன.
பலவந்த ஜனாஸா எரிப்புக்கு ஐந்தாண்டுகள் நிறைவடையும் இந்நாளில் 2020 ஆம் ஆண்டில் அனைத்து இலங்கையர்களும் அனுபவித்த துயரங்களையும் வேதனைகளையும் நாம் மிகுந்த கவலையுடன் நினைவு கூறுகின்றோம்.
இலங்கை அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
1. சட்டத்திற்குப் புறம்பாக “கட்டாய ஜனாஸா எரித்தல்” எவ்வாறு மற்றும் ஏன் நடைமுறையில் கொண்டு வரப் பட்டது என்பதற்கான சுயாதீனமும் நம்பகமானதுமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது, மீண்டும் நிகழாதிருக்கும் உத்தரவாதங்கள் மற்றும் நேரடி பொறுப்பா ளர்களை அடையாளம் காணும் நட வடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நீதித்துறைப்படிகளும் உள்ளடக்கப் பட வேண்டும்.
2. விஞ்ஞான ஆதாரங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்த தகவல்களை புறக்கணித அதாவது இந்தக் கொடூரமான கொள்கையை திட்டமிட்டும், நடைமுறைப்படுத்தியதும் பொறுப்பாளர்களாக உள்ள அதிகாரிகளையும், முடிவெடுத்தவர்களையும் சட்டத்தின் கீழ் நீதிக்கு முன் கொண்டு வரப்படல் வேண்டும்.
3. மார்ச் 31ஆம் திகதியை, கட்டாய ஜனாஸா எரிக்கப்பட்டவர்களின் நினைவாகவும், எதிர்காலத்தில் இத்தகைய அநியாயங்கள் மீண்டும் நிகழாதிருக்கும் உறுதிப்பத்திரமாகவும், தேசிய நினைவு நாளாக அறிவிக்கப்படல் வேண்டும்.
4. ஒரு தேசிய நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். இதில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட வேண்டும். இது அவர்களின் நினைவுகளுக்கும், குடும்பங்களின் வேதனைகளுக்கும் மரியாதை செலுத்தும் முகமாகவும், இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் அணுகத்தக்கவாறும் இருக்க வேண்டும்.
இந்தப் பிரகடனம், இலங்கையில் நீதியும், மரியாதையும், அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தீவிர உறுதிமொழியாகக் கருதப்படுகிறது.
இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்துடன் துணையாக நின்ற அனைத்து நற்பண்புடைய நபர்களுக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திற்கும், நாங்கள் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசாங்கம் உரிய நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்ப தோடு, இச்சம்பவங்களைப் பற்றிய எங்கள் ஈடுபாடும் தொடரும் என்பதையும், அவர்களின் புரி தலையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்’
கட்டாயமாக , ஏன் இவ்வாறான மனிதாபிமானமற்ற செய்தார்கள்,இவற்றுக்கு பின்னால் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்,
நிச்சயமாக அநியாயகாரர்களை அல்லாஹ்
விடம்ட்டான்,
இம்முயற்சிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக,