பலஸ்தீனத்தில் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவரக் கோரி,நேற்று (23) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பலஸ்தீன குழந்தைகளின் வாழும் உரிமையை உறுதிப்படுத்து, கொழும்பிலிருந்து காசா வரை, கொலையை நிறுத்துங்கள், ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டு வாருங்கள், பலஸ்தீனத்தை விடுவிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட சுலோக அட்டைகளை போராட்டக்காரர்கள் ஏந்தி நின்றனர்.
பலஸ்தீனத்தில் இனப்படுகொலைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் தலைவர் எம்.என்.எம். ஷாம் நவாஸ் உட்பட சமூக செயற்பாட்டாளர், பலஸ்தீன ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.