அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்கு வந்துவிட்டன: கனடா புதிய பிரதமர் மார்க் கார்னி

Date:

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்குவந்துவிட்டதாக கனடாவின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி இது ஒருபோதும் நடக்காது என தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது என நான் பல மாதங்களாக எச்சரித்துவந்தேன், கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்குவந்துவிட்டது என தெரிவித்துள்ள அவர் இது பெரும் துன்பியல் நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னிக்கு இப்போது 60 வயது ஆகிறது. இவருக்கு 4 குழந்தைகள். இவர் கனடாவின் போர்ட் ஸ்மித்தில் உள்ள ஆர்க்டிக் பிரதேச பகுதியில் பிறந்தார்.

அதன்பிறகு எட்மான்டன் நகரில் வளர்ந்தார். சிறுவயதிலேயே ஹாக்கி போட்டியில் ஆர்வம் கொண்டிருந்தார். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார்.

பொருளாதார மேதையாக உயர்ந்தார். பேங்க் ஆஃப் கனடா மற்றும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து ஆகிய வங்கிகளில் ஆளுநராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2008 ல் கனடா பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

அப்போது பேங்க் ஆஃப் கனடாவின் ஆளுநராக பொறுப்பெற்று பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டார். இவர் பொருளாதார கொள்கைகளை வகுப்பதிலும், முதலீடு திட்டங்களை வகுப்பதிலும் வல்லவர்.

கனடா தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரி விதிப்பில் சிக்கி உள்ளது. இதற்கிடையே தான் அவர் இடைக்கால பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

தற்போது தேர்தலில் களமிறங்கி பிரதமராகவும் தேர்வாகி உள்ளார். இவருக்கு லிபரல் கட்சியில் அதிக ஆதரவு உள்ளது. பிரதமர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பாக கட்சிக்குள் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டபோது அவருக்கு 1 இலட்சத்து 52 ஆயிரம் பேர் ஓட்டளித்தனர்.

அதாவது 86 சதவீத ஓட்டுகளை பெற்று முன்னிலை பெற்ற மார்க் கார்னி இப்போது அந்த நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

Popular

More like this
Related

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...

காற்றழுத்தம் நீடிக்கிறது: நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. மழை

இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து...

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...