நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை நிதியுதவி

Date:

நிலநடுக்கத்தால்  பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை மற்றும் மல்வத்து – அஸ்கிரிய பீடம் ஆகியவை இணைந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளன.

இந்த நன்கொடை, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் மற்றும் ஸ்ரீ தலாதா மாளிகையின் மதிப்பிற்குரிய தியவதன நிலமே ஆகியோரால் இலங்கையில் உள்ள மியன்மார் தூதரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால்  உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலும், மியன்மார் மக்களின் நல்வாழ்வு மற்றும் மீளெழுச்சிக்கு பிரார்த்தனை செய்யும் வகையிலும் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் விசேட வழிபாடுகள் புதன்கிழமை (02) நடைபெற்றன.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அநுநாயக்க தேரர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் மகா சங்கத்தினருடன், புனித தந்த தாதுவுக்கு அருகில் ஒன்றுகூடி பிரித் ஓதி ஆசீர்வாதங்களை வழங்கினர்.

“ஆழமாக வேரூன்றிய தேரவாத பௌத்த பாரம்பரியத்தைக் கொண்ட நாடான மியன்மாருடன் இலங்கை நீண்டகால மற்றும் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளது.

இந்தப் பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக கண்டி ஸ்ரீ தலாதா மாளிகை மற்றும் மல்வத்து – அஸ்கிரி பீடம் ஆகியவை  இணைந்து 1.5 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளன” என ஸ்ரீ தலாதா மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...