மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளார்.
வத்திக்கான் நகரத்தின் புனித பேதுரு சதுக்கத்தில், நாளை (26) நடைபெறவுள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில், இலங்கை அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொள்ளவுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
