மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனை இத்தாலியின் வத்திக்கானில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ் ஏப்ரல் 21ஆம் திகதி வாத்திக்கானில் உள்ள தனது இல்லத்தில் 88 ஆவது வயதில் நித்திய இளைப்பாறுதல் அடைந்தார்.
நல்லடக்க ஆராதனையில் பங்கேற்க புனித பேதுரு தேவாலயத்துக்கு பொதுமக்கள் வருகை தந்துள்ளனர். நல்லடக்க ஆராதனையில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உள்ளி்ட்ட உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தந்துள்ளனர்.