உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில் விசேட அறிவிப்பு!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையின்படி, ஊழியர் ஒருவர் வாக்களிப்பதற்காக விடுமுறை கோரினால், அது தொடர்பாக பணியமர்த்துபவர், ஊழியருக்கு போதுமானதாக கருதப்படும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேர பணி விடுமுறையை ஊதியத்துடன் வழங்க வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்களிக்க தகுதி பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களது நிறுவனங்கள் விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்படும் விடுமுறை காலம், தற்காலிக ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய சிறப்பு விடுமுறையாக கருதப்பட வேண்டும் எனவும், இது ஊழியர்களின் வழக்கமான விடுமுறை உரிமைகளுக்கு வெளியில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் வாக்களிப்பதற்காக வழங்கப்படும் விடுமுறை காலம், அவரது பணியிடம் மற்றும் வாக்குச்சாவடிக்கு இடையிலான தூரத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பதற்காக கடமை நிலையத்திலிருந்து தனது வாக்கெடுப்பு நிலையத்திற்குச் செல்ல வேண்டியுள்ள தூரத்தின் அளவு – வழங்க வேண்டிய ஆகக் குறைந்த விடுமுறைக் காலம்

  • கி.மீ. 40 அல்லது அதற்குக் குறைவாயின் – அரை நாள் (1/2)
  • கி.மீ 40 க்கும் 100 க்கும் இடைப்பட்டதெனில் – ஒரு நாள் (1)
  • கி.மீ 100 க்கும் 150 க்கும் இடைப்பட்டதெனில் – 11/2 நாட்கள்
  • கி.மீ 150 க்கு அதிகமாயின் – 2 நாட்கள்

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...