மியன்மாருக்கு மருத்துவக் குழுவை அனுப்பும் இலங்கை; சுகாதார அமைச்சு

Date:

மியன்மாரில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்க மருத்துவக்குழு ஒன்றை அந்நாட்டுக்கு  அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

களுத்துறையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே மியன்மாருக்கு உதவி வழங்குவது தொடர்பில்  இலங்கையின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

மியன்மார் அரசாங்கம் தேவையான அனுமதியை வழங்கியவுடன், அனர்த்த மீட்புப் பணிகளில் அனுபவமுள்ள விசேட வைத்தியர்கள் மற்றும்  தாதியர்கள் உள்ளடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

“மியன்மாருக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான பொருட்களை வழங்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேலதிகமாக  களத்தில் உதவி வழங்க விசேட மருத்துவக் குழு ஒன்றை  நாங்கள் நியமித்துள்ளோம்.

வெளிவிவகார அமைச்சு மூலம்  உதவி வழங்க எங்கள் தயார் நிலையை மியன்மார் தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளோம் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...