15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டு வழங்கும் முறையில் மாற்றம்

Date:

எதிர்வரும் ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விசேட அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.

இது தொடர்பில் திணைக்களத்தின் பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் பி.எம்.டி. நிலூஷா பாலசூரிய விடுத்துள்ள அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளதாவது,

ஏப்ரல் 15, 16, 17 ஆம் திகதிகளில் நண்பகல் 12.00 மணி வரை மாத்திரமே ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளைப் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தற்போது நடைமுறையிலுள்ள 24 மணி நேர ஒருநாள் சேவையானது ஏப்ரல் 15 – 17 வரை இடம்பெறாது எனவும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள புதுவருடத்தை தொடர்ந்து தங்களது சொந்த இடங்களுக்குச் செல்லும் ஊழியர்களின் விடுமுறை காரணமாக, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...

வரலாற்றில் முதன்முறையாக புதிய பெண் பஸ் நடத்துனர்களுக்கு நியமனம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 20 பஸ் நடத்துனர்களுக்கான நியமனங்களை...