4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் வரிசையில்: மறு அறிவித்தல் வரும் வரை தலதா யாத்திரையை தவிர்க்கவும்!

Date:

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (24) காலை இடம்பெற்ற அரசாங்க அதிபர்களுடனான விசேட சந்திப்பை தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டார்.

ஒரு நாளைக்கு 80,000 இற்கு மேற்பட்டோர் கண்டி நகருக்கு வருகை தருவதாகவும் , இதனால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் கண்டி மாவட்டச் செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் , ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக யாத்ரீகர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், இன்றும் (24), நாளையும் (25) யாத்திரை நடவடிக்கையை தவிர்க்குமாறு நேற்று (23) பொலிஸார், பொதுமக்களைக் கோரியுள்ளனர்.

ஸ்ரீ தலதா வழிபாடு கடந்த 18ஆம் திகதி ஆரம்பமானது.

தற்போது குறித்த யாத்திரைக்காக கண்டி நகரில் ஏற்கனவே 4 இலட்சத்திற்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் வரிசையில் கூடியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எனவே, இன்று (24) மற்றும் நாளை (25) புனித தந்த தாது வழிபாட்டுக்கு ஏற்கனவே போதுமான எண்ணிக்கையிலான யாத்ரீகர்கள் வருகைத் தந்துள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கும் யாத்ரீகர்கள் வருகைத் தந்தால், அவர்களால் யாத்திரை மேற்கொள்ள முடியாது என்று பொலிஸர் கூறுகின்றனர்.

மேலும், வருடாந்தம் தலதா வழிபாட்டு நிகழ்வை நடத்துவது தொடர்பான முன்மொழிவை மகாநாயக்க தேரர்கள் மற்றும் தியவடன நிலமேயிடம் முன்வைக்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தெரிவித்தார்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...