துருக்கியில் இன்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.2 அலகுகளாக பதிவாகி இருந்தன.
துருக்கி தலைநகர் இஸ்தான்புல் அருகே இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டில் இன்று பிற்பகல் 3.19 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து 80 கிமீ தொலைவில் சிலிவ்ரி என்ற இடத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தலைநகர் இஸ்தான்புல் அச்சமூட்டும் வகையில் குலுங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.