அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்தும் ஒரு முன்னோடி திட்டம் இந்த வாரம் தொடங்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன் மூன்னோடித் திட்டம் கொட்டாவ மற்றும் கடவத்தை நெடுஞ்சாலை இடமாற்றங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த இடமாற்றங்களை பயன்படுத்தும் பயணிகள் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகள் மூலமாகவும், QR குறியீடுகளை ஸ்கேனிங் மூலமாகவும் பணம் செலுத்த முடியும்.
சோதனை கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மே மாதத்திற்குள் இலங்கையின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் வங்கி அட்டைகளை அறிமுகப்படுத்த அமைச்சகம் இலக்கு வைத்துள்ளது.