இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷின் முதலாவது ஹஜ் குழு சவூதி வருகை

Date:

இந்தியா, பாகிஸ்தான் மற்றும்  பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்த ஆண்டுக்கான முதற் தொகுதி ஹஜ் யாத்ரீ­கர்கள் சவூதி அரே­பி­யா­விற்குப் பய­ண­மா­கினர்.

பங்களாதேஸிலிருந்து முதற் தொகுதி ஹஜ் யாத்ரீகர்கள் ஜெட்டாவிலுள்ள கிங் அப்துல் அஜிஸ் சர்வதேச விமான நிலை­யத்தைச் சென்­ற­டைந்தனர்.

ஜெட்டா விமான நிலை­யத்தில் சவூதி அரேபியாவில் உள்ள பங்களாதேஷ் தூதர் முகமட் டெல்வார் ஹொசைன், சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆலோசகர் மஸன் ஜவஹர், ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகத்தின் இயக்குனர் சல்மான் அல் பெலாபி, மற்றும் பிற அமைச்சக அதிகாரிகள் யாத்ரீகர்களை வரவேற்றனர்.

இதேவேளை இந்தியாவிலிருந்தும் முதல் ஹஜ் குழு மதீனா சென்றடைந்தது. மதீனா விமான நிலையத்தில் இந்திய யாத்ரீகர்களின் முதல் குழுவிற்கு சவூதிக்கான இந்திய தூதுவர் டாக்டர் சுஹேல் கான் மற்றும் தூதர் ஜெனரல் ஃபஹத் சூரி ஆகியோர் அன்பான வரவேற்பு அளித்தனர்.

அவர்களுடன் சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் பேராசிரியர் அப்துல் அஜிஸ் ஏ. வஸ்ஸான் மற்றும் மூத்த சவூதி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு இந்தியாவில் 1,22,518 யாத்ரீகர்கள் புனித யாத்திரைக்காக புறப்படுவார்கள். முதல் ஹஜ் விமானங்களில் லக்னோவிலிருந்து 288 யாத்ரீகர்களும் ஹைதராபாத்திலிருந்து 262 யாத்ரீகர்களும் புறப்பட்டனர்.

அதேநேரம் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திலிருந்து 2025 ஆம் ஆண்டிற்கான முதலாவது ஹஜ் குழு மதீனாவுக்குப் புறப்பட்டது.

இந்த ஆண்டு, சுமார் 89,000 பாகிஸ்தானியர்கள் ஹஜ் செய்வார்கள், மேலும் 23,620 பேர் தனியார் சுற்றுலா நிறுவனங்கள் மூலம் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...