சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

Date:

பண்டிகை காலத்தில் தூரப் பிரயாணங்களை மேற்கொள்வோரின் வசதி கருதி, விசேட போக்குவரத்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, சேவைக்காக 500 பேருந்துகள் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 40 ரயில் சேவைகள் மேலதிகமாக சேவையில் இணைக்கப்பட்டுள்ளதாகத் ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, பதுளை, பெலியத்த, திருகோணமலை, கண்டி, அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய நகரங்களுக்கு இந்த விசேட ரயில் சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • வெள்ளிக்கிழமை (11) இரவு 7.30 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு ஒரு ரயில் இயக்கப்படுவதோடு அதே குறிப்பிட்ட நேரத்தில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
  • வெள்ளிக்கிழமை (11) இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு ஒரு ரயில் இயக்கப்படும். அதே நேரத்தில் காலியிலிருந்து கொழும்பு கோட்டைக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
  • வெள்ளிக்கிழமை (11) காலை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (18) மீண்டும் திரும்பும்.

இந்த 10 சிறப்பு ரயில்களும் நீண்ட வார விடுமுறை நாட்களில் 31 பயணங்களை மேற்கொள்ளும் என ரயில்வே  திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கான பேருந்து ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...