ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தல்

Date:

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது. ரிக்டர் அளவில் 6.2 என நிலநடுக்கம் பதிவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஜப்பானின் நிஷினூமோட்டிலிருந்து 54 கிமீ தொலைவில் நிலநடுக்கம் பதிவு பதிவாகியுள்ளது. இது பிலிப்பைன்ஸ் கடல் பகுதி என்றாலும், கரைக்கு நெருக்கமாக இருக்கிறது.

அந்நாட்டு நேரப்படி இரவு 11.03 மணிக்கு இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.

தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) படி, கியூஷு தீவை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளது. இதனால் நிலஅதிர்வு உணரப்பட்டது.

இதுவரை பெரிய அளவிலான சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. மூன்றாவது பெரிய தீவு கியூஷு அடிக்கடி நில அதிர்வுவுக்கு உள்ளாகும் இடமாகும்.

தற்போதைய நிலநடுக்கத்திற்கு பின்னர், உள்ளூர் நிர்வாகம் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், சாத்தியமான நிலநடுக்கங்களுக்குத் தயாராக இருக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

தேசிய மீலாத் கண்காட்சியில் பெரியமுல்லை அஹதியா மாணவர்களின் மகத்தான பணி!

நடந்து முடிந்த 42வது தேசிய மீலாத் விழா பல்வேறு சிறப்பம்சங்களோடு மிகக்...

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் பிரதிநிதியை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் MCSL கோரிக்கை

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர்...

வறட்சியால் இலங்கையின் பல மாவட்டங்கள் பாதிப்பு: பால் உற்பத்தி வீழ்ச்சி, குடிநீர் தட்டுப்பாடு மற்றும் வனவிலங்குகள் அவதி

இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை...