தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை பாராளுமன்றத்தில்…!

Date:

பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து  தேசபந்து தென்னகோனை நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை (08)  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்கு சமர்ப்பித்துள்ள பிரேரணை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சபாநாயகருக்கு பிரேரணை கையளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பிரேரணையில் அவரது தவறான நடத்தை, பதவியை தவறான முறையில் பயன்படுத்தியமை, அவர் தனது பொலிஸ்மா அதிபர் பதவியை பயன்படுத்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை அவரது பதவிக்காலத்தில் முறையற்ற விதத்தில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டும் 5ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் உயர் பதவியில் இருக்கின்ற அரச அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பின்பற்றுவதற்கான யோசனையாகவே இந்த பிரேரணை நாளைய தினம் பாராளுமன்றததுக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கிறது.

 

Popular

More like this
Related

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...

சிறுவர்களுக்கான அன்றாட துஆக்கள் மற்றும் ஒழுக்கங்கள்: மும்மொழிகளில் புதிய நூல் வெளியீடு!

பிள்ளைகள் அன்றாட வாழ்வில் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் அவர்கள் கடைப்பிடிக்க...