மெதகெகில பிரீமியர் லீக் மென்பந்து கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக வெஸ்டர்ன் வொரியஸ் அணி தெரிவு

Date:

தெல்தோட்டை, மெதகெகில, ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் வருடந்தோறும் நோன்பு பெருநாளை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற மெதகெகில பிரீமியர்  லீக் மென்பந்து கிரிக்கெட் தொடரின் சாம்பியனாக முஹம்மட் அஜ்மிர் தலைமையிலான வெஸ்டர்ன் வொரியஸ் அணி தெரிவானது.

முஹம்மட் ஸனீர் தலைமையிலான ரோயல் செலேன்ஜர்ஸ் அணியினை வெற்றிக் கொண்டே இவ்வாறு வெஸ்டர்ன் வொரியஸ் அணி வெற்றி வாகை சூடியது.

கடந்த ஏப்ரல் மாதம் 02, 03ம் திகதிகளில் மெதகெகில ஸ்ரேன்ஜர்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்ற இந்த தொடரில் மொத்தம் 08 அணிகள் மோதின.

லீக் முறையில் இடம்பெற்ற இந்த தொடரில் தமது முதல் 03 போட்டிகளிலும் தோல்வியினை தழுவி தொடரிலிருந்து வெளியேறும் நிலையிலிருந்த பெரோனி தலைமையிலான சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தினை பெற்றுக் கொண்டது அனைவராலும் பேசப்பட்ட ஒரு விடயமாக இருந்தது.

இந்த தொடரில் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களை பிரபல சமூக சேவையாளர் கலாநிதி முனீர் ஸாதிக் (காஸிபி) அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...